பாக்யா எடுக்க போகும் இறுதி முடிவு என்ன? முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி?

By News Dsk

பாக்கியலட்சுமி: விஜய் டிவி - யில் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ஒரு வழியாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்த இந்த வார ப்ரோமோ வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்-ல் உள்ளது.

அந்த ப்ரோமோ-வில், கொலை வழக்கில் ஜெயிலுக்கு சென்ற கோபி நிரபராதி என தீர்ப்பு கிடைத்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் இனியாவிற்கு அவரது முன்னாள் காதலன் ஆகாஷுடன் திருமணம் நடக்கிறது. பின்பு பாக்கியலட்சுமி-யின் மாமியார் ஈஸ்வரி, பிள்ளைகள் எல்லோரும் அவரவர் வாழ்க்கையை தேர்தெடுத்து சென்று விட்டனர், நீ ஏன் கோபியுடன் மீண்டும் சேர்ந்து வாழ கூடாது என்று கேட்கிறார். இதற்கான பாக்கியா-வின் பதில் என்ன என்பதை பொறுத்தே பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் கொண்டாட்டம் இருக்க போகிறது.

ஒரு வழியாக இறுதி நாட்களை எட்டியுள்ள இந்த தொடர், ஏற்கனவே விவாகரத்து ஆன இருவரும் பழைய விஷயங்களை மறந்துவிட்டு மீண்டும் இணைவார்களா அல்லது முடியாது என மறுத்துவிட்டு வேறு கதைக்களத்துடன் மீண்டும் தொடங்குமா என்று ரசிகர்கள் இணையத்தில் விவாதத்தை தொடங்கியுள்ளனர்.

கடந்த வாரமே பாக்கியலட்சுமி தொடரின் இறுதி படப்பிடிப்பு குறித்த நடிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக, இந்த வாரம் இந்த தொடர் முடிவுக்கு வரும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை உள்ளது.

பாக்கியலட்சுமி தொடரின் இந்த வார ப்ரோமோ வீடியோ..

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE