திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: முதலமைச்சர் தலைமையில் இன்று நடக்கிறது!

By News Dsk

முதலமைச்சரும், திமுக தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன் 28, சனி) மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மட்டுமன்றி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் என பலதரப்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்த கூட்டம் குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் 28-06-2025 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE