நீலகிரி: கனமழை எச்சரிக்கை எதிரொலி - பள்ளிகளுக்கு விடுமுறை, சுற்றுலாத் தலங்களும் மூடல்

By News Dsk

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மழைக்கான எச்சரிக்கையும் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும், அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று ஒருநாள் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்​திக்​குறிப்​பில்,

தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. தென்​னிந்​திய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இவை காரண​மாக, தமிழகத்​தில் இன்று ஒருசில இடங்​களி​லும், 6, 7-ம் தேதி​களில் பெரும்​பாலான இடங்​களி​லும் இடி, மின்​னலுடன், லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகத்​தில் இன்று நீல​கிரி, கோவை மாவட்​டங்​களின் மலைப்​பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் அதி கனமழை​யும், தேனி, தென்​காசி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிகக் கனமழை​யும், திண்​டுக்​கல், திருப்​பூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி, ஈரோடு மற்​றும் சேலம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும் கனமழை​யும் பெய்ய வாய்ப்​புள்​ளது.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE