ISRO 100 | NVS-02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தி புதிய மைல்கல்லை எட்டியது இஸ்ரோ.

By News Dsk

ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனைகளை படைத்துவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 6.23 மணிக்கு என்.வி.எஸ்-02 (NVS-02) என்ற புதிய செயற்கைக்கோளை தாங்கிய ஜி.எஸ்.எல்.வி-எஃப்15 (GSLV F -15) என்ற 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது. இதன் மூலம் 100-வது ராக்கெட்டை ஏவிய புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

100 - வது ராக்கெட்:
2,250 கிலோ எடை கொண்ட, 10 ஆண்டுகள் வரை செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி-எஃப்15 (GSLV F -15) ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 5.23 மணிக்கு தொடங்கியது. இதில் எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணு கடிகாரம் உட்பட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன.

பயன்கள்:
இருப்பிட வழிகாட்டுதலும், பேரிடர் மேலாண்மையும் இதன் முதன்மை பணியாகும். இந்தியா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் 1,500 கிலோமீட்டர் தூரம் வரை வழிகாட்டும். மேலும் பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை அளிப்பதன் மூலம் இந்திய அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மேலும் மற்ற செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை இது கண்காணிக்கும்.

புதிய மைல்கல்:
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முதல் முதலாக கடந்த 1979ம் ஆண்டு ஆக.10ம் தேதி முதல் ராக்கெட் ஏவப்பட்டது. கடந்த 46 ஆண்டு பயணத்தில் பல சாதனைகளை புரிந்த இஸ்ரோ (ISRO) இன்று தனது 100-வது ராக்கெட்-ஐ ஏவி புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளது.

இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் இவரது தலைமையில் ஏவப்படும் முதல் ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி-எஃப்15 என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE