எளிமையான கலவை ரெசிபிக்கள்: கோவைக்காய் சாதம்

By News Dsk

நன்மைகள்:
உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கோவக்காயில் உள்ளது. 100 கிராம் கோவைக்காயில் 3.1 கிராம் கார்போஹைட்ரேட், 1.4 மி.கி இரும்பு, 40 மி.கி கால்சியம், 0.07 மி.கி வைட்டமின்கள் பி1 மற்றும் பி2 மற்றும் 1.6 மி.கி உணவு நார்ச்சத்து உள்ளது. இது தவிர ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை பெறுவதோடு மட்டுமல்லாமல் பல கடுமையான நோய்களின் அபாயத்தையும் தவிர்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
உதிராக வடித்த சாதம் - 2 கப்,
பெரிய வெங்காயம் - 1,
கோவைக் காய் - 100 கிராம்,
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் தலா - 2 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுந்து - அரை டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:
1. வெங்காயம், கோவைக்காயை மெல்லியதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
2. வாணலியில் சிறிது எண்ணெயை காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
3. பின்னர் சிறிது வெங்காயம், தேங்காயை சேர்த்து வதக்குங்கள்.
4. பச்சை வாடை போனதும், கோவைக் காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கி, கறிவேப்பிலை, எலுமிச்சம் சாறு சேர்த்து இறக்குங்கள்.
5. இந்தக் கலவை தயாரானதும் உதிராக வடித்த சாதத்தைக் சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்வளவுதான் கோவைக்காய் சாதம் தயார். இப்பொழுது சூட்டோடு எடுத்து பரிமாறுங்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE