சூர்யா சேதுபதி-யின் ‘ஃபீனிக்ஸ்’ படத்தை வெகுவாக ரசித்த விஜய்!

By News Dsk

சென்னை: விஜய் சேதுபதியின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தை நடிகர் விஜய் பார்த்து, படக்குழுவை பாராட்டியுள்ளதாக அதன் இயக்குனர் அனல் அரசு தனது X-தளத்தில் (@ActionAnlarasu) பகிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் அவரது மகன் சூர்யா நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ள ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். பிரபல ஸ்டன்ட்ர் ஆக்‌ஷன் - ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த நவம்பர் 14-அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு தற்போது இன்று (ஜூலை 4, 2025) வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தை நடிகர் விஜய் பார்த்து படக்குழுவை வெகுவாக பாராட்டியதாக இப்படத்தின் இயக்குனர் அனல் அரசு தனது X-தளத்தில் (@ActionAnlarasu) புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய்-யுடன் படத்தின் நாயகன் சூர்யா சேதுபதியும், இயக்குநர் அனல் அரசுவும் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE