தர்ஷன் நாயகனாக நடித்து உருவாகியுள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.
‘கனா’, ‘தும்பா’ படங்களுக்குப் பிறகு அடுத்து தர்ஷன் கதா நாயகனாக நடித்துள்ள படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. இது ஃபேன்டஸி ஹாரர் காமெடி வகையில் படக்குழு தயாரிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் (SK Productions) நிறுவனம் இப்படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவும், மிடில் கிளாஸ் குடும்பத்தின் அன்றாட உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவும் படக்குழு இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த ராஜவேல் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ள இந்த படத்தில் காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி , தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தினை விஜய பிரகாஷ் மற்றும் சக்திவேல் இணைந்து தயாரித்துள்ளார்கள். இதன் ஒளிப்பதிவாளராக சதீஷ்-ம் இசையமைப்பாளராக ராஜேஷ் முருகேசன்-ம் பணிபுரிந்துள்ளனர்.