ஹெச்.ராஜா நடிகராக அறிமுகமாகும் ‘கந்தன்மலை’: இணையத்தில் வைரல்!!!

By News Dsk

தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினரும் தமிழக முன்னாள் எம்எல்ஏ-மான ஹெச்.ராஜா புதியதாக நடிகராக அவதாரமெடுத்து பிரதான வேடத்தில் நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஹெச்.ராஜா. இவர் காரைக்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். பல ஆண்டுகாலமாக அரசியலில் இருந்து வரும் ஹெச்.ராஜா அடிக்கடி தலைப்பு செய்திகளில் வரக்கூடிய மிக சிலரில் முக்கியமானவர். இவர் தற்போது திரைப்பட நடிகராக களம் இறங்கியுள்ளார்.

அறிமுக இயக்குநர் வீரமுருகன் இயக்கும் முதல் படமான ‘கந்தன்மலை’ என்ற படத்தில் "தர்மபோராளி" ஹெச்.ராஜா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் பின்னணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை சிவ பிரபாகரன் - சந்திரசேகர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறார். இந்த போஸ்டரை பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஹெச்.ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் இணையத்தில் ஹெச்.ராஜா வைரலாகி வருகிறார்.

படத்தின் வெளியீடு மற்ற விவரங்கள் எப்போது என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டுள்ளனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE