பாஸ்போர்ட்-ஐ இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA), பாஸ்போர்ட் சட்டம் 1967 இன் கீழ் வழங்குகிறது.
பாஸ்போர்ட் ஏன் அவசியம்?
வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒருவரின் அடையாளத்தையும் அவரின் நாட்டையும் சான்றளித்து அந்த நாட்டு அரசாங்கம் வழங்கும் ஆவணமே பாஸ்போர்ட் (Passport) ஆகும். பாஸ்போர்ட்-ல் அதை வைத்திருப்பவரின் பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த ஊர், தாய்-தந்தை பெயர், கணவன் அல்லது மனைவி பெயர், பாஸ்போர்ட் எண், வழங்கப்பட்ட நாள், வழங்கிய அலுவலகத்தின் இடம் ஆகிய தகவல்களைக் கொண்டிருக்கும். பாஸ்போர்ட் இல்லாமல் ஒருவர் அந்த நாட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. மேலும் வெளிநாடுகளுக்கு பயணிக்க விசா பெறுவதற்கு முதலில் சமர்ப்பிக்க வேண்டியதும் இந்த பாஸ்போர்ட் தான்.
எப்படி விண்ணப்பிக்கலாம்?:
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதில் தொடங்கி விசா புதுப்பித்தல் வரை அனைத்தையும் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் போர்டல் (passportindia.gov.in) வழியே பெற முடியும். மேலும் தனிநபர்கள் தங்கள் பாஸ்போர்ட் விண்ணப்ப நிலையை இந்த போர்டலில் கண்காணிக்கலாம்.
அதிகாரபூர்வ இணைய தளம்: https://passportindia.gov.in/
பதிவு செயல்முறை: Steps to apply paasport
Step 1: பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் போர்டல் (https://passportindia.gov.in/) மூலம் தனிநபர்கள் ஒரு கணக்கை பதிவு செய்யவும். (முகப்புப் பக்கத்தில் உள்ள "இப்போது பதிவுசெய்க" ("Register Now") இணைப்பைக் கிளிக் செய்யவும்).
Step 2: பதிவுசெய்யப்பட்ட உள்நுழைவு ஐடியுடன் (Login Id) பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் போர்ட்டலில் உள்நுழையவும்.
Step 3: "புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்/பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்கவும்" (Apply for Fresh Passport/Re-issue of Passport) இணைப்பைக் கிளிக் செய்யவும்.
Step 4: படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்கவும்.
Step 5: "View Saved/Submitted Applications" என்ற பிரிவில் உள்ள "Pay and Schedule Appointment" என்ற லிங்க்-ஐ கிளிக் செய்து பணம் செலுத்தி சந்திப்பை திட்டமிடவும். அனைத்து PSK/POPSK/PO களிலும் சந்திப்புகளை முன்பதிவு செய்வதற்கு ஆன்லைன் கட்டணம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Step 6: விண்ணப்ப குறிப்பு எண் (ARN)/அப்பாய்ண்ட்மென்ட் எண் கொண்ட விண்ணப்ப ரசீதை அச்சிட "விண்ணப்ப ரசீதை அச்சிடு" இணைப்பைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: விண்ணப்ப ரசீதை அச்சிடுவது இனி தேவையில்லை.
Step 7: பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வருகை தரும் போது, உங்கள் சந்திப்பு விவரங்களுடன் கூடிய SMS, முன்பதிவு செய்யப்பட்ட பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK)/பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு (RPO) அசல் ஆவணங்களுடன் செல்லவும்.
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:
1. தற்போதைய முகவரிக்கான சான்று (Address Proof): (பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று)
2. பிறந்த தேதிக்கான சான்று (Proof of Date of Birth): (பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று)
மேலதிக தகவல்களுக்கு: https://passportindia.gov.in/AppOnlineProject/online/procFormSubOnl