சென்னை: IPL T20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22-ம் தேதி முதல் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது முதல் ஆட்டத்தை 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியுடன் மோதுகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (19-ம் தேதி) காலை 10.15 மணிக்கு தொடங்கும் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
டிக்கெட் விற்பனை https://www.chennaisuperkings.com/ என்ற இணையதளத்தில் தொடங்கும் என்றும் டிக்கெட்டின் விலை ரூ 1,700 முதல் ரூ.7,500 வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிக்கெட் வாங்கும் ரசிகர்களுக்கான பொதுவான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதன் படி,
* ஆன்லைன் விற்பனையில், ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
* வளாகத்திற்குள் பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்களும் அனுமதிக்கப்படாது.
* டெலிவரி உட்பட வெளிப்புற உணவு அல்லது பானங்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாது.
* செல்லப்பிராணிகள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படாது.