Today Gold rate: தங்கம் விலை சவரனுக்கு அதிரடி குறைவு; இன்ப அதிர்ச்சியில் நகை பிரியர்கள் #GoldRate #goldprice #silerRate

By News Dsk

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25, 2025) சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.72,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை:

நேற்று சென்னையில் சவரனுக்கு ரூபாய் 600 குறைந்து ஒரு சவரன் ரூ.73,240க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் அதிரடியாக ஒரு சவரனுக்கு ரூபாய் 680 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.72,560 - க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இந்த வாரத்தில் மிகப்பெரிய விலை வீழ்ச்சியாகும்.

கிராம் அடிப்படையில் பார்க்கும் போது இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் ரூ.85 குறைந்து ரூ.9,070க்கு விற்பனை ஆகிறது.

இன்றைய விலை (22 கேரட்):

1 கிராம்: ரூ.9,070 (- Rs 85)
1 சவரன்: ரூ.72,560

கடந்த 7 நாட்களின் தங்கம் விலை:

தேதி விலை கிராமில் (22கேரட்)
24.06.2025 ரூ.73,240
23.06.2025 ரூ.73,840
22.06.2025 ரூ.73,880
21.06.2025 ரூ.73,880
20.06.2025 ரூ.73,680
19.06.2025 ரூ.74,120
18.06.2025 ரூ.74,000

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE