விண்வெளி பயணத்தை தொடங்கிய சுபன்ஷு சுக்லா.. 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்த பெருமை

By News Dsk

சர்வதேச விண்வெளி மையத்துக்கு (International Space Station) , ஆய்வுப் பணிக்காக டிராகன் விண்கலத்தில் ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (39) உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழுவினர் நேற்று புறப்பட்டு சென்றனர். இதன் மூலம் 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளி செல்லும் இந்திய வீரர் என்ற பெருமையை ஷுபன்ஷு சுக்லா பெறுகிறார்.

அமெரிக்காவின் ஆக்ஸியாம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றுடன் இனைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மற்றும் ஃபல்கான் 9 ராக்கெட் (SpaceX Falcon 9 spacecraft) மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீர்களை அனுப்பி ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

சுபான்ஷு சுக்லாவுடன்(India), பெக்கி விட்சன் (USA), ஸ்லாவோசி உஸ்னான்ஸ்கி(Poland), திபோர் கபு(Hungary) ஆகியோரும் சென்றுள்ளனர். ‘கிரேஸ்’ என பெயரிடப்பட்ட டிராகன் விண்கலம், ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து(NASA's Kennedy Space Centre in Florida) நேற்று மதியம் 12.01-கு செலுத்தப்பட்டது. 28 மணி நேர பயணத்துக்குப்பின் சர்வதேச விண்வெளி மையத்தை இன்று மாலை 4.30 மணிக்கு சென்றடையும்.

இந்தக் குழுவினர் சர்வதேச விண்வெளி மையத்தில் 2 வார காலம் தங்கி இருந்து இஸ்ரோவின் 7 அறிவியல் சோதனைகளுடன் சுமார் 60 பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர். பிறகு டிராகன் விண்கலத்தில் பூமி திரும்புவார்கள்.

இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா பயணத்துக்கு முன் அளித்த பேட்டியில், ‘‘நான் விண்வெளிக்கு ஆய்வு உபகரணங்களை மட்டும் எடுத்துச் செல்லவில்லை. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை கொண்டு செல்கிறேன்’’ என்று உணர்ச்சி ததும்ப இந்தியாவின் குரலாக தெரிவித்துள்ளார்.

முன்னர், இவர்களது இந்த பயணம் மோசமான வானிலை மற்றும் திரவ ஆக்ஸிஜன் கசிவு போன்ற காரணங்களால் 3 முறை ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE