இன்றைய முக்கிய செய்திகள் – 01 July 2025

By News Dsk

இன்றைய டாப் 10 செய்திகள்:

1. திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் இபிஎஸ்

திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்.” என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

2. திருப்புவனம் இளைஞர் கொலை: சி.பி.ஐ விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

திருப்புவனம்: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அஜித்குமாரின் குடும்பத்தினரை அமைச்சர் பெரிய கருப்பன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் அஜித்குமார் தாயார் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு "ரொம்ப சாரி மா, தைரியமா இருங்கள். ஆக்சன் எடுக்க சொல்லி உள்ளேன். சீரியசா ஆக்சன் எடுக்க சொல்லியுள்ளேன். என்ன செய்யணுமோ செய்ய சொல்றேன். மந்திரி பார்த்து கொள்வார். தைரியமாக இருங்கள். உங்களை அழைத்தில் மகிழ்ச்சி" என்று ஆறுதல் சொல்லி நம்பிக்கை கொடுத்துள்ளார்.

3. ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு - இன்று தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்

தமிழகத்​தில் அடுத்த வருடம்(2026) சட்​டப்​பேரவை தேர்​தல் நடைபெறுவதையடுத்து அதில் வெற்றி பெற்று ஆட்​சியை தக்க வைக்​கும் முயற்சியாக திமுக பல்​வேறு முன்​னெடுப்​பு​களை செய்து வருகிறது. அதன் நீட்சியாக உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக 'ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற நிகழ்வின் வழியாக உறுப்​பினர் சேர்க்கையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று (ஜூலை 1) தொடங்கி வைத்துள்ளார்.

4. 2024-25 நிதியாண்டின் ஜிஎஸ்டி வசூல் ரூ.22.08 லட்சம் கோடி: 5 ஆண்டுகளில் இரட்டிப்பானது

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி(GST) நடைமுறைக்கு வந்தது. ஜிஎஸ்டி வசூல் கடந்த 5 ஆண்டில் இரட்டிப்பாகி 2024-25 நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது.

5. வெடிவிபத்து மற்றும் நிவாரணம்:

* தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

*அதேபோல விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சின்னகாமன் பட்டி - யில் அமைந்துள்ளள கோகுலேஸ் பட்டாசு ஆலையில் இன்று (01 ஜூலை 2025, செவ்வாய்க்கிழமை) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர், மேலும் 4 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

6. புதுச்சேரியில் ஜூலை 9 - ம் தேதி பந்த்: 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் பந்த் அறிவிப்பு.

புதுச்சேரியில் ஜூலை 9-ம் தேதியில் தொழிற்சங்கங்கள் கூட்டாக பந்த் மற்றும் 8 இடங்களில் மறியல் போராட்டங்களை அறிவித்துள்ளனர். அன்றைய தினம் பேருந்து, ஆட்டோ இயங்காது என்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7. 1,853 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை உள்ள 46 கி.மீ., தூர நெடுஞ்சாலையை(NH - 87) ரூபாய் 1,853 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்ற பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

8. தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு; ஒரு சவரன் ரூ.72,160

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரித்து, சென்னையில் இன்று (ஜூலை 01) ஒரு சவரன் ரூ.72,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

9. ஆனித் திருமஞ்சனம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் திருக்கோவிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ தேரோட்டம் வேகு விமரிசையுடன் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுந்தனர்.

10. வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதிதாக பணியில் சேர்பவர்களுக்கும், அவர்களுக்கு பணி வழங்கும் நிறுவனங்களுக்கும் ஆதரவு அளிக்கக் கூடிய வகையில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE