உலகளவில் அதிவேகமாக வளர்கிறது இந்தியா: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல் #Morgan stanley report

By News Dsk

புதுடெல்லி: உலகளவில் அதிவேகமாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா வரும் காலங்களிலும் நீடிக்​கும் என அமெரிக்​கா​வைச் சேர்ந்த மார்​கன் ஸ்டான்லி நிறுவனம் பொருளா​தா​ரம் குறித்து வெளி​யிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்​கா​வைச் சேர்ந்த மார்​கன் ஸ்டான்லி (Morgan stanley) என்ற புகழ்பெற்ற நிறுவனம் உலக நாடு​களின் பொருளா​தா​ரம் குறித்து ஆய்​வறிக்கை வெளியிடுவது வழக்கம். இது மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகும். இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்​கா, சீனா, ஐரோப்​பிய நாடு​கள் உள்​ளிட்​டவை தங்​களின் பொருளா​தார வளர்ச்​சியை அதிகரிப்பதற்காக அதிக தொகையை செல​விட்டு வரு​கின்​றன. ஆனால் அது பலனளிக்கவில்லை. மேலும் சர்​வ​தேச பொருளா​தார வளர்ச்சி மந்​த​மாகவே இருக்​கிறது.

பரஸ்பர வரி விதிப்பு(Reciprocity tax) என்ற பெயரில் அமெரிக்க அரசு மற்ற நாடு​களின் மீது வர்த்தக வரி​களை விதித்​துள்​ளது. இதன் எதிரொலியாக கடந்த ஏப்​ரலில் அமெரிக்​கா​வின் பொருளா​தா​ரம் பெரும் சரிவை சந்தித்ததுடன் உலகம் முழு​வதும் பாதிப்​பு​களை ஏற்​படுத்​தி​யது. மேலும் நடப்​பாண்​டில் அமெரிக்​க பொருளா​தார வளர்ச்சி என்பது 1.5% இருக்​கும். இது மேலும் குறைந்து 2026-ம் ஆண்டு 1% சரிவடையும்.

அமெரிக்​கா​ சட்​ட​விரோத குடியேறிகளை வலுக்​கட்​டாய​மாக வெளி​யேற்றி வருவதால் அங்கு தொழிலா​ளர்​களுக்கு பற்​றாக்​குறை ஏற்​படும், அதனால் இது நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சியை மோசமாகப் பாதிக்​கும்.

அதே போல ஐரோப்​பா​வின் பொருளா​தா​ரம் நடப்​பாண்​டில் 1% இருக்கும். மேலும் இங்கு ஏற்​றுமதி கணிச​மாக பாதிக்​கப் ​பட்​டிருப்​ப​தால் பொருளா​தார வளர்ச்சி மோசமாக பாதிக்​கப்​பட்டுள்​ளது.

சீனா​வின் வீட்டு வசதித் துறை பெரும் சரிவை சந்தித்திருப்பதன் விளைவாக அது சீனாவின் பொருளா​தா​ரத்தை மிகக் கடுமை​யாக பாதித்துள்​ளது. நடப்​பாண்​டில் சீனா​வின் பொருளா​தார வளர்ச்சி 4.5 சதவீத​மாகவும் வரும் 2026-ல் அது 4.2 சதவீத​மாகவும் குறை​யும்.

தற்போது 1 சதவீத​மாக இருக்​கும் ஜப்​பானின் பொருளா​தார வளர்ச்சி அடுத்த ஆண்​டில் 0.5 சதவீத​மாக குறையக்​கூடும்.

ஆனால் இந்​தி​யா​வின் ஏற்​றுமதி கணிச​மான வகையில் அதி​கரித்து வருகின்றது. இது இந்தியாவின் உள்​நாட்டு சந்தையின் அபரிமித​மாக வளர்ச்சியை காட்டுகிறது. இதன் ​காரண​மாக உலகளா​விய அளவில் அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியாவே நீடிக்​கும். நடப்​பாண்​டில் இந்தியாவின் பொருளா​தார வளர்ச்சி 5.9% - வும் இது 2026-ல் 6.4% -ஆக அதி​கரிக்​கும்.

இவ்​வாறு பொருளா​தா​ரம் குறித்து அந்த ஆய்​வறிக்​கை​யில்​ கூறப்பட்​டுள்​ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE