சென்னை: த.வெ.க - வின் செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் விஜய்-யை ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டு உள்ளது.
சென்னை பனையூர்-ல் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமான தீர்மானங்கள் பின்வருமாறு:
* தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுப்பதற்கான முழு அதிகாரத்தையும் கட்சியின் தலைவரான விஜய்-க்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* ஜூலை 2-வது வாரத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கவும் தீர்மானம்.
* தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டை திருச்சி அல்லது மதுரையில் நடத்த செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம்.
* வரும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரை விஜய் மக்களை சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
* த.வெ.க - வின் முதல்வர் வேட்பாளராக விஜய்-யை தேர்வு செய்து செய்தும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதன் மூலம் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மும்முனை போட்டி என்பது தெளிவாகியுள்ளது.