பட்ஜெட் விலையில் டெக்னோ Pova 7. கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க !!!

By News Dsk

சென்னை: சீன நிறுவனமான டெக்னோ மொபைல், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 5G தொழில்நுட்பத்தில் TECNO POVA 7 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

2006-ல் நிறுவப்பட்ட சீனா நிறுவனமான டெக்னோ மொபைல், 2017-ம் ஆண்டு இந்தியச் சந்தையில் தனது வரவை பதிவுசெய்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவன போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள தனது உற்பத்திக் கூடத்திலிருந்து சந்தைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், டெக்னோ நிறுவனம் தற்போது Pova 7 & Pova 7 PRO என 2 புதிய மாடல் ஸ்மார்ட் போன்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலில் Ella AI அம்சம், தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழி ஆதரவு என்ற பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

TECNO POVA 7 Features:

* 6.78 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
* Android 15 OS
* மீடியாடெக் டிரான்சிட்டி 7300 அல்டிமேட் சிப்செட்
* 8GB RAM
* 128 GB / 256 GB Storage
* 50 MB back camera
* 13 MB Front Camera
* செல்ஃபி கேமரா
* 6,000mAh பேட்டரி
* 45 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீட்
* 5G நெட்வொர்க்
* யுஎஸ்பி டைப்-சி போர்ட்
* ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
* 3 Color varieties

TECNO POVA 7 Price:

* TECNO POVA 7 போனின் விலை ரூ.14,999 முதல் ஆரம்பமாகிறது.
* TECNO POVA 7 PRO போனின் விலை ரூ.18,999 முதல் ஆரம்பமாகிறது.

இந்த TECNO POVA 7 போனின் விற்பனை இந்தியாவில் வரும் 10-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE