டெல்லியில் நிலநடுக்கம்: சற்று நேரத்துக்கு முன்பு பல பகுதிகளில் திடீர் நிலநடுக்கம்!

By News Dsk

டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (10, ஜூலை, 2025) காலை 9.04 மணிக்கு திடீரென கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.

ஹரியானாவின் ஜஜ்ஜாரில் இன்று காலை சுமார் 9:04 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது. அதேபோல தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலா அதிர்வு சில வினாடிகள் நீடித்தது. மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

ஹரியானாவின் ரோஹ்தக்கை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது டெல்லியிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. டில்லி, நொய்டா, குருகிராம் , காஜியாபாத் போன்ற பல்வேறு ஊர்களில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE