தங்கம் விலை நிலவரம்: சவரன் ரூ. 75,760; வரலாற்றில் புதிய உச்சம்

By News Dsk

சென்னை: இன்று (ஆகஸ்ட் 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,760 என்ற உச்ச விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி, இந்திய-அமெரிக்க வர்த்தக சிக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் நம் நாட்டில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 07) தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 9,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூ.70 வீதம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,470-க்கும், ஒரு சவரன் 75,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரலாற்றில் இதுவே உச்சபட்ச விலை ஆகும். இந்த விலையுயர்வு நகைப்பிரியர்கள் மற்றும் சுபகாரியங்களுக்கு ஆபரணங்கள் வாங்க காத்திருப்பவர்களுக்கு பேரிடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE