ICICI Bank: குறைந்தபட்ச இருப்பு தொகை 400% அதிகரிப்பு அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள். 

By News Dsk

ஐசிஐசிஐ (ICICI Bank) வங்கியில் புதிதாக சேமிப்புக் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்பு தொகை (ICICI Bank Minimum balance) நகர்ப்புறங்களில் ரூ. 50,000 எனவும் சிறு நகரங்களில் ரூ. 25.000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ. 10,000 எனவும் நிர்ணயம் செய்துள்ளது.

கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிமுறையின் படி, பெருநகர மற்றும் நகர்ப்புறங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் இனி குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ. 10,000 என்று இருந்த குறைந்த பட்ச இருப்பு தொகை தற்போது 400% உயர்ந்து ரூ. 50,000 என உயர்ந்துள்ளது புதிதாக கணக்கு தொடங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் தினசரி ருபாய் 50,000 என பராமரிக்க வேண்டும் அல்லது மாதத்தில் ஒரு நாள் முழுவதும் 15 லட்சம் ரூபாயை இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE