விஜய் ஆண்டனியின் 25-வது படம் - சக்தித் திருமகன், தெலுங்கில் பராசக்தி

By News Dsk

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது 25-வது படம் குறித்த அறிவிப்பை நேற்று (ஜன.29) வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழில் ‘சக்தித் திருமகன்’, தெலுங்கில் பராசக்தி என படத்திற்கு பெயரிட்டுள்ளது படக்குழு.

‘புயலடிக்கிற வேகத்தில் புழுதி குப்பைங்க இருக்குமா; இவன் நடக்குற வேகத்த சகுனிக்கூட்டம் தாங்குமா’ என கேப்ஷனுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு இணையத்தில் வைரல்.

விஜய் ஆண்டனி - யின் 25-வது படத்தை அருண் பிரபு இயக்குகிறார். விஜய் ஆண்டனி, இசையமைத்து நாயகனாக நடிக்கிறார். இந்தப் படம் வரும் கோடைகால விடுமுறையில் வெளியாகும் என படக்குழு தற்போது பகிர்ந்துள்ள டைட்டில் போஸ்டரில் தெரிவித்துள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE