உலகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு நிறைவுற்று 2026-ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான மக்கள் உச்சகத்துடன் நேற்றிரவு முதலே கொண்டாடி வருகின்றனர். சரியாக இரவு 12:00 மணிக்கு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், வாழ்த்துச் செய்தியை சொல்லியும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பூஜைகளும் செய்து புத்தாண்டை வரவேற்கின்றனர். இந்த புதிய ஆண்டில் செய்யவேண்டியதை உறுதிமொழிகளாக எடுத்தும் தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
புத்தாண்டை முன்னிட்டு உலகின் அனைத்து தலைவர்களும் தங்கள் வாழ்த்து செய்திகளை நட்பு நாடுகளுடனும், தங்கள் நாட்டு மக்களுடனும் பகிர்ந்து வருகின்றனர். அவ்வகையில் நம் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் தங்கள் வாழ்த்து செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2025 ம் ஆண்டு அனைவருக்கும் பல்வேறு வெற்றிகளையும், படிப்பினைகளையும், சந்தோஷத்தையும் அள்ளிக்கொடுத்திருக்கும். அவ்வகையில் இந்த 2026, "மக்கள் அனைவரும் மகிழும் வகையில் நல்ல மழையைப் பொழிந்து, வளங்கள் மற்றும் விவசாயம் செழிக்கவும். மக்களாட்சி அனைவருக்குமான மகிழ்ச்சியை கொடுக்கவும், உயிர்கள் குறைவின்றி வாழவும், நல்ல தவம் மற்றும் வேள்விகள் பெருகவும். மக்கள் அனைவரும் அற நெறியில் மேன்மையுள்ள வாழ்க்கை வாழவும்" இறைவனின் அருளுடன் இந்த ஆண்டு சிறப்பாக அமையட்டும் என்று "TOP NEWS TAMIL" சார்பில் வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!