இன்றைய முக்கிய செய்திகள் (மார்ச் 15, 2026) @Topnewstamil #BREAKING #TAMILNEWS

By News Dsk

இன்று மார்ச் 15, 2026 தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

# தேர்தல் களம் 2026 - வேகமெடுக்கும் தொகுதிப் பங்கீடு:
தேர்தல் ஆணையம் இம்மாத இறுதிக்குள் தேர்தல் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 10, 2026-க்குள் புதிய அரசு அமைய வேண்டும் என்பதால், களம் மிகத் தீவிரமாக உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மறுபுறம் திமுக கூட்டணியில் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது!

# நெல் கொள்முதல்: முதல்வர் பிரதமருக்கு கடிதம்
தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிகமாக இருப்பதால், மத்திய அரசு நிர்ணயித்த 16 லட்சம் டன் அரிசி கொள்முதல் இலக்கை 32 லட்சம் டன்னாக உயர்த்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்

# கரூரில் பயங்கர விபத்து
கரூர் அருகே சரக்கு ரயில் கல்லூரி பேருந்தை மோதியது. இதில் 24 மாணவர்கள் காயமடைந்தனர். ஒருவர் தீவிர காயம் அடைந்துள்ளார்.

# விஜய் டெல்லி பயணம் – அரசியல் சர்ச்சை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் விசாரணைக்கு ஞாயிற்றுக்கிழமை ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் டெல்லி சென்றது அரசியல் கூட்டணி தொடர்பானது என எதிர்க்கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளன. ஆனால் TVK மற்றும் BJP இரண்டு கட்சிகளும் அதனை கடுமையாக மறுத்துள்ளன.

# விமான டிக்கெட் விலை உயர்வு
எரிபொருள் செலவு அதிகரிப்பால், IndiGo மற்றும் Air Indiaக்கு பிறகு Akasa Air நிறுவனமும் fuel surcharge வசூலிக்க முடிவு செய்துள்ளது.

# தூத்துக்குடி விமான நிலையம் – புதிய பெயர்
Tuticorin Airport அதிகாரப்பூர்வமாக Thoothukudi Airport என பெயர் மாற்றப்பட்டது. புதிய டெர்மினல் மற்றும் ரன்ன்வே விரிவாக்கத்துடன் பெரிய வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

# தமிழக ஸ்டார்ட்அப்புக்கு அரசு முதலீடு
சென்னையைச் சேர்ந்த Agnikul Cosmos என்ற விண்வெளி ஸ்டார்ட்அப்பில் தமிழக அரசு ₹25 கோடி முதலீடு செய்ய உள்ளது. இது இந்தியாவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள திட்டங்களை வேகப்படுத்தும் என கூறப்படுகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE