5 மாநில தேர்தல் 2026 அட்டவணை #Elections2026

By News Dsk

இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15, 2026) தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் அறிவித்தார்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் முக்கிய விவரங்கள் இதோ:

தேர்தல் அட்டவணை 2026

மாநிலம் தேர்தல் தேதி வாக்கு எண்ணிக்கை
தமிழ்நாடு ஏப்ரல் 23 மே 4
கேரளா ஏப்ரல் 9 மே 4
புதுச்சேரி ஏப்ரல் 9 மே 4
அசாம் ஏப்ரல் 9 மே 4
மேற்கு வங்கம் ஏப்ரல் 23 & 29 மே 4

தமிழ்நாட்டின் முக்கிய தேதிகள் (234 தொகுதிகள்):

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது:

தேர்தல் அறிவிப்பாணை: மார்ச் 30, 2026

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஏப்ரல் 6, 2026

வேட்புமனு பரிசீலனை: ஏப்ரல் 7, 2026

மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்: ஏப்ரல் 9, 2026

வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 23, 2026

வாக்கு எண்ணிக்கை: மே 4, 2026

முக்கிய குறிப்புகள்:

நடத்தை விதிகள்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

வாக்காளர்கள்: இந்த 5 மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பாதுகாப்பு: அமைதியான முறையில் தேர்தல் நடத்த மத்திய பாதுகாப்புப் படையினர் பெருமளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE