இன்றைய முக்கிய செய்திகள் (ஏப்ரல் 16 2026) #BREAKING #TAMILNEWS

By News Dsk

இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

தொகுதி மறுவரையறை மசோதா இன்று தாக்கல்: இண்டியா கூட்டணி எதிர்ப்பு!

தொகுதி மறு​வரையறை மசோ​தாவை நிறைவேற்ற நாடாளு​மன்ற சிறப்​புக் கூட்​டம் இன்று கூடு​கிறது. மகளிர் இடஒதுக்​கீடுக்கு ஆதரவு தெரிவிக்​கும் இண்​டியா கூட்​ட​ணிக் கட்​சிகள், தொகுதி மறு​வரையறைக்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன.

ஈரானை சரணடைய வைக்க முடியாது: ஈரான் அதிபர் திட்டவட்டம்!

ஈரான் அரசு மீது பலத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு முயற்சியும் இறுதியில் தோல்வியடையும் என்று அந்நாட்டின் அதிபர் கூறினார். இஸ்லாமாபாத்தில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதா: திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

இன்று நாடாளு​மன்ற சிறப்​புக் கூட்​டத்தில் தொகுதி மறு​வரையறை மசோ​தா நிறைவேற்றவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரி​வித்து தமிழகம் முழு​வதும் இன்று கருப்​புக் கொடி போராட்​டம் நடத்​தப்பட உள்​ள​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​துள்​ளார்.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள்: 93.70% பேர் தேர்ச்சி!

சிபிஎஸ்இ கீழ் நாடு முழு​வதும் 29 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி​கள் இயங்​கி வரு​கின்​றன. இந்த பாடத் திட்​டத்​தில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு​களை சிபிஎஸ்இ நேற்று வெளி​யிட்​டது. இதில் தேர்வு எழு​தி​ய​ 93.7 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்​றனர். இது 2025-ம் ஆண்​டை​விட 0.04 சதவீதம் அதி​கம்.

பயணிகள் சேவை, வருவாயில் தெற்கு ரயில்வே முதலிடம்: ரூ.8,271 கோடி வரு​வாய்!

கடந்த நிதி​யாண்​டில் இந்​திய ரயில்​வே​யில் பயணி​கள் சேவை மற்​றும் வரு​வா​யில் தெற்கு ரயில்வே ரூ.8,271 கோடி வரு​வாய் ஈட்டி முதலிடம் முதலிடம் பிடித்து சாதனை படைத்​துள்​ளது. இது முந்​தைய ஆண்டை விட ரூ.736 கோடி அதி​க​மாகும்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்பு: எஸ்&பி அறிக்​கை!

இந்த ஆண்​டில் கச்சா எண்​ணெ​யின் சராசரி விலை ஒரு பேரலுக்கு 130 டால​ராக உயர்ந்​தால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 0.8% வரை குறை​யும் என எஸ்&பி குளோபல் ரேட்​டிங்ஸ் நிறு​வனம் வெளியிட்ட ஒரு அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ளது.

லக்னோவை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது ஆர்சிபி!

நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது லீக் தொடரில் நேற்று பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி முதலிடத்துக்கு முன்னேறியது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE