இன்றைய முக்கிய செய்திகள் (ஏப்ரல் 20, 2026) #BREAKING #TAMILNEWS

By News Dsk

இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

ஹார்முஸ் ஜலசந்தி மூடல் எதிரொலி: ஈரானுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிய நிலையில், “எங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள் மற்றும் அனைத்து பாலங்களும் தகர்க்கப்படும் என்றும் இனிமேலும் பொறுமை காக்க முடியாது என்றும் இது இறுதி எச்சரிக்கை” எனவும் சமூக வலைதள பதிவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

--------------------------------

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி; மீண்டும் நிறைவேற்ற முயற்சிப்போம் - மத்திய சட்ட அமைச்சர்!

நீலகிரி மாவட்ட ஊட்டியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் "தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்படவில்லை , அது இன்னமும் நிலுவையில் உள்ளது என்றும் அதை நிறைவேற்ற ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிப்போம்” எனவும் தெரிவித்தார்.

--------------------------------

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 23 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மீட்புப் பணி நடந்தபோது ஆலையின் இன்னொரு அறை வெடித்துச் சிதறியதில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உட்பட மொத்தம் 19 பேர் காயமடைந்தனர்.

--------------------------------

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு: 23-ம் தேதி வாக்குப்பதிவு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்று வரும் அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நாளை ஏப்ரல் 21 மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

--------------------------------

‘கிட்னி’ திருட்டு குறித்து விசாரணை, நடவடிக்கை உறுதி” - இபிஎஸ்!

நாமக்கல் மாவட்டத்தில் 5 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி அமைந்ததும், கிட்னி திருட்டு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

--------------------------------

அட்சய திருதியை முன்னிட்டு நகைக் கடைகளில் குவிந்த மக்கள்!

அட்சய திரு​தியை நாளில் தங்​கம் மற்​றும் வெள்ளி நகைகள் வாங்​கு​வது பொது​மக்​களின் வழக்​க​மாக மாறி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்​டுக்​கான அட்சய திருதியை நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் பொது​மக்​கள் குவிந்​தனர். பெரும்பாலோர் எடை குறை​வான தங்க ஆபரணங்​கள், நாண​யங்​களை வாங்க ஆர்​வம் காட்​டினர்.

--------------------------------

பஞ்சாப் கிங்ஸ் அதிரடி: லக்னோவை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE