இன்றைய முக்கிய செய்திகள் (ஏப்ரல் 21, 2026) #BREAKING #TAMILNEWS

By News Dsk

இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

ஹார்முஸ் பகுதியில் ஈரான் சரக்கு கப்பலை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை!

இரு வாரங்​களுக்கு தற்​காலிக போர் நிறுத்​தம் அமலில் உள்ள நிலையில், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்தை ஈரான் ராணுவம் முழு​மை​யாக தடை செய்​துள்​ளது. இதனால் ஜலசந்​தி​யின் இரு முனை​களி​லும் அமெரிக்க கடற்​படை முடக்கி உள்​ளது. மேலும் ஹார்​முஸ் வளை​குடா பகு​தி​யில் சென்று கொண்​டிருந்த ஈரான் சரக்கு கப்​பலை அமெரிக்க கடற்​படை கைப்​பற்றி உள்​ளது.

--------------------------------
தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு:

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஒரே கட்​ட​மாக 23-ம் தேதி நடை​பெற உள்​ள நிலையில் தேர்​தல் பிரச்​சா​ரம் இன்று மாலை 6 மணி​யுடன் நிறைவடைகிறது. தொகு​திக்கு சம்​பந்​தம் இல்​லாதவர்​கள் தொகுதியைவிட்டு வெளி​யேறவும், இன்று காலை 10 மணி முதல் 23-ம் தேதி நள்​ளிரவு 12 மணி வரை டாஸ்​மாக் கடைகள், பார்​களை மூடு​மாறும் தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

--------------------------------
தொகுதி மறுவரையறையால் யாருக்கும் இழப்போ, ஆதாயமோ இல்லை: சந்திரபாபு நாயுடு கருத்து!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதற்காக, நேற்று கோவைக்கு வருகை தந்த ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, “தொகுதி மறுவரையறையால் யாரும் எதையும் இழக்கப் போவதில்லை. அனைவருக்கும் சமமான அளவிலேயே ஆதாயம் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

--------------------------------
பிரதமர் மோடியுடன் தென் கொரிய அதிபர் சந்திப்பு: 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தென் கொரிய அதிபர் அரசு முறைப் பயணமாக நேற்று புதுடெல்லி வந்தடைந்தார். இந்தியா - தென் கொரியா இடையேயான இருதரப்பு உறவை உயர்த்த இரு தரப்பும் முடிவு செய்துள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

--------------------------------
விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது முறைகேடானது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

--------------------------------
அக்ஷய திரிதியை முன்னிட்டு 25,000 கிலோ தங்கம் விற்பனை:

அக்ஷய திரிதியை முன்னிட்டு, கடந்த இரு நாட்களாக, 25,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன என்றும் மதிப்பின் அடிப்படையில் 40,000 கோடி ரூபாயை கடந்துள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டை விட 13,000 கோடி ரூபாய் அதிகமாகும்.

--------------------------------

குஜராத் அணியை 100 ரன்களில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்: திலக் வர்மா அதிரடி சதம்!

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 200 ரன்கள் என்று இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 15.5 ஓவர்களில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE