இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.
7 மணிக்கு தொடங்கிய ஜனநாயக திருவிழா: தமிழகம் & மேற்கு வங்காளத்தில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு!
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில், முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
----------------------------------
வாக்காளர் அடையாள அட்டைக்கு 12 மாற்று ஆவணங்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள ஆதார், பாஸ்போர்ட், பான் கார்டு, வங்கி பாஸ்புக், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
------------------------------------
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு காலவரையின்றி நீட்டிப்பு: ட்ரம்ப் தகவல்
அமெரிக்கா - ஈரான் இடையிலான 2 வார போர் நிறுத்தம் நேற்று முடிவடைய இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கையை எடுப்பதாக அவர் தனது ட்ரூத் வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
----------------------------------
வாக்குச்சாவடிக்குள் ‘செல்பி’ எடுக்க தடை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வாக்குச்சாவடிக்குள் புகைப்படம், செல்பி அல்லது வீடியோ எடுத்தால் 3 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
----------------------------------
தமிழகத்தில் ரூ.1,262 கோடி மதிப்பில் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல்: அர்ச்சனா பட்நாயக்
தமிழகத்தில் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பில் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதில் ரொக்கப் பணம் மட்டும் ரூ.543 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.
----------------------------------
தேர்தலில் வாக்களிக்க சென்னையிலிருந்து 10 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
----------------------------------
ஐபிஎல் 2026: 40 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஏகானா மைதானத்தில் நடைபெற்ற, ஐபிஎல் 2026 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியைத் தங்களின் அபார பந்துவீச்சால் 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 160 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஏமாற்றம் அளித்தது.