இன்றைய முக்கிய செய்திகள் (ஏப்ரல் 29, 2026) #BREAKING #TAMILNEWS

By News Dsk

இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

ஈரான் விதித்த நிபந்தனைகள் - பரிசீலிப்பதாக வெள்ளை மாளிகை தகவல்!

ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு, அணு ஆயுத முயற்சியை கைவிடுதல் போன்ற அமெரிக்காவின் நிபந்தனைகள் குறித்து நேற்று ஈரான் தனது நிலைப்பாட்டை அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தியது. இந்நிலையில் ஈரான் மற்றும் லெபனான் மீது போர் தொடுக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா அளிக்குமானால், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க தயார் என ஈரான் கூறி இருந்த நிலையில், இது குறித்து பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

----------------------------

5 மாநில தேர்தல் முடிந்​தது: கருத்துக்கணிப்புகள் இன்று மாலை வெளியாகிறது!

அசாம், கேரளா, புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய 3 சட்​டப்​பேர​வை​களுக்​கான தேர்​தல் ஏப்​ரல் 9-ம் தேதியும், தமிழகத்திற்கு கடந்த 23-ம் தேதியும் ஒரே கட்​ட​மாக தேர்​தல் முடிந்​தது. மேற்​கு​வங்கத்​தில் 23 ல் முதல் கட்டமாகவும், இன்று 2-ம் கட்ட தேர்​தல் நடக்கிறது. ஆக இன்று மாலை 6 மணி​யுடன் 5 மாநில தேர்​தல் முடிவுக்கு வரு​கிறது. தேர்​தல் ஆணை​யத்​தின் வழி​காட்​டு​தலின் ​படி தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​கணிப்​பு​கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகவுள்ளன.

----------------------------

ஆந்திராவில் ரூ.1.35 லட்சம் கோடி முதலீடு: கூகுள் ஏஐ டேட்டா மையத்துக்கு அடிக்கல்!

ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் 3 இடங்​களில் ரூ.1.35 லட்​சம் கோடி முதலீட்​டில் கூகுள் ஏஐ டேட்டா மையம் அமைப்​ப​தற்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று நடை​பெற்​றது. இதில், மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவுடன் இணைந்து ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அடிக்​கல் நாட்​டி​னார். இதன் மூலம் 1.88 லட்​சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்​கும். இந்த ஏஐ மையம் 2028-ம் ஆண்​டுக்​குள் அமைக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

----------------------------

மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: இன்று காலையில் தேரோட்டம்!

மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் சித்​திரைத் திரு​விழா​வின் 10-ம் நாளான நேற்று காலை​ மீனாட்​சி- சுந்​தரேசுவரர் திருக்​கல்​யாணம் கோலாகல​மாக நடை​பெற்​றது. பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​களின் தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை தேரோட்​டம் நடை​பெறுகிறது.

----------------------------

பஞ்சாபை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி: ஐபிஎல் 2026!

ஐபிஎல் 2026 தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் தனது வெற்றியை் பதிவு செய்துள்ளது. 223 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் தனது இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE