இன்றைய முக்கிய செய்திகள் (மே 11, 2026) #BREAKING #TAMILNEWS

By News Dsk

மே 11, 2026: இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

முதல்வராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்: பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் அர்லேகர்!

நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

-----------------------------

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம்: தமிழக அரசு!

17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடுவதாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டிருப்பவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்க இருக்கிறார்கள்.

-----------------------------

3 முக்கிய உத்தரவுகளில் முதல் கையெழுத்து: இலவச மின்சாரம், சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப்பொருள் தடுப்புப் படை!

தமிழக முதல்வராக ஜோசப் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை தொடர்ந்து, 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள் தடுப்புப் படை என 3 முக்கிய கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார்.

-----------------------------

தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்: பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள் என்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்" எனவும் தெரிவித்துள்ளார்.

-----------------------------

ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாக மக்களின் குரலை எதிரொலிப்போம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

திமுகவின் சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் "ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாக மக்களின் குரலை எதிரொலிப்போம் என்றும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம் என்றும் எதிரிக்கட்சியாக இல்லாமல், ஒரு நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம்" எனவும் தெரிவித்துள்ளார்.

-----------------------------

அதிமுகவில் கையெழுத்து வேட்டை: பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு வலுக்கிறதா எதிர்ப்பு?

அதி​முக​வில் பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமிக்கு எதிர்ப்பு வலுத்​துள்​ளது என்றும், முன்​னாள் அமைச்சர் சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் 34 அதி​முக எம்​எல்​ஏக்​கள் தவெக​வுக்கு ஆதர​வு அளிக்க முடி​வெடுத்​துள்​ளனர் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வருகின்றன.

-----------------------------
கடைசி பந்தில் ஆர்சிபி த்ரில் வெற்றி: முதல் சுற்றோடு வெளியேறியது மும்பை இந்தியன்ஸ்!

ராய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல்-2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 167 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆர்சிபி அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இதனால் இந்த சீசனில் முதல் சுற்றோடு மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறி உள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE