பட்ஜெட் 2025-26: மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள், முக்கிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் என்னென்ன ?

By News Dsk

புதுடெல்லி: மக்களவையில் 2025-26 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (Feb 01, 2025) தாக்கல் செய்தார். இதன் மூலம் தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பட்ஜெட்-ல் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கிகள், அணு உலைகள், வேளாண்மை, தனியார் துறை, தனிநபர் வருமான வரி, மருத்துவம் போன்ற பல்வேறு பிரிவுகளுக்கு முக்கிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் உரையாற்றினார். அவரின் உரையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

* கடன் தவிர மொத்த வரவுகள் ரூ 34.96 லட்சம் கோடியாகவும், மொத்த செலவினங்கள் ரூ 50.65 லட்சம் கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

* நாட்டின் நிகர வரி வருவாய் ரூ 28.37 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

* நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

* நாட்டின் மூலதன செலவினம் ரூ.11.21 லட்சம் கோடி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1% சதவீதமாகும்). மற்றும் மொத்த சந்தை கடன் ரூ 14.82 லட்சம் கோடியாக இருக்கும்.

* ஜல் ஜீவன் திட்டம் 2028 - ம் ஆண்டு வரை நீட்டிப்பு. இது பாதுகாப்பான குடிநீர் வழங்கும் மத்திய அரசின் ஒரு திட்டமாகும்.

* ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் புதிய வருமான வரி விகிதத்தின் கீழ் வரி செலுத்த தேவையில்லை. வரி விலக்கு அறிவிப்பால் ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ. 1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ.2,600 கோடியும் அரசுக்கு வரி இழப்பு ஏற்படும்.

* புற்றுநோய் மருந்து உட்பட 36 வகையான உயிர் காக்கும் மருந்துகளுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயிர் காக்கும் மருத்துவ செலவுகள் குறையும்.

* மின்னணு வாகனம், செல்போன் பேட்டரி தயாரிப்புகளுக்கு வரிச் சலுகை; ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்க ஊக்குவிப்பு வாரியம் அமைக்கப்படும்.

* ஸ்விக்கி, சோமேட்டோ (Zomato, Swiggy) ஊழியர்களின் நலனை மேம்படுத்த புதிதாக அடையாள அட்டை செயல்படுத்த படும்.

* சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.

* மருத்துவ படிப்புக்கு கூடுதலாக 10,000 இடங்கள் வீதம் 5 ஆண்டுகளில் மருத்துவ படிப்புக்கு சுமார் 75,000 கூடுதல் இடங்கள் கிடைக்கும்:

* ஐ.ஐ.டி.,களில் இந்த ஆண்டு கூடுதலாக 65 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை.

* நாடு முழுவதும் 1.5 லட்சம் ஊரக அஞ்சல் நிலையங்கள் மேம்படுத்தப்படும். இந்திய தபால் துறையை ஒரு பெரிய பொது தளவாட அமைப்பாக மாற்றி கிராமப்புற பொருளாதாரம் மேம்படுத்தப்படும்.

* வருமான வரி தாக்கல் செய்யும் காலம் 4 ஆண்டுகளாக உயர்த்தப்படும்.

* காலணி மற்றும் தோல் துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வகையில், சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* பீஹாரில் உணவு பதப்படுத்துதலுக்காக தேசிய நிறுவனம் தொடங்கப்படும்.

* பட்டியலின பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ 2 கோடி கடன் வழங்கப்படும்.

* பீஹாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும்.

* ரூ 1 கோடியில் நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

* பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்கும் பணியில் தீவிர கவனம் செலுத்தப்படும்.

* அரசு உயர் நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் மூலம் இணைய வசதி ஏற்படுத்தப்படும்.

* புதியதாக சிறு அணு உலைகள் உருவாக்க ரூ 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

* 2 சொந்த வீடுகள் வரை வரிச் சலுகைகள் பெறலாம்.

* 120 புதிய வழித்தடங்களில் புதிய விமான சேவை விரிவாக்கம் செய்யப்படும்.

* வேளாண் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டங்கள் செயல்படுத்தபடும்.

* கிசான் கார்டு மூலம் விவசாய கடன் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும்.

* கூட்டுறவு, சிறு தொழில் நிறுவனத்திற்கு கூடுதல் கடன் உதவி.

* புதிய வருமான வரி சட்ட மசோதா அடுத்த வாரத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த புதிய வருமான வரி மசோதாவில் அனைத்து வரி குழப்பங்களுக்கும் ஒரு தெளிவு இருக்கும். இந்த மசோதா தற்போதைய வருமான வரி (ஐடி) சட்டத்தை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* பருப்பு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பான சாகுபடியை தரும் விதைகள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.மேலும் தற்சார்புக்கான இயக்கம் தொடங்கப்படும்.

* அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.

* கிசான் கடன் அட்டை மூலம் 7.7 கோடி விவசாயிகள் குறுகிய கால கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* பட்டியல் / பழங்குடி / பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மகளிர் புதிதாக தொழில் முனைவோருக்கு ரூ 2 கோடி வரை கடன் உதவி வழங்கப்படும்.

* இந்தியாவில் பொம்மை உற்பத்தித் துறையில் சந்தைப்படுத்த சர்வதேச மையம் உருவாக்கும் வகையில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE