வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக பலத்த மழை பதிவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், திருச்சி, தேனி, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, கோவையில் பல பகுதிகளில் இரவு நேரத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
மழை அளவு விவரங்கள் (சென்டிமீட்டரில்):
கோவை மாவட்டம்:
குனியமுத்தூர் – 6.36
சிட்ரா – 4.4
பீளமேடு – 4.12
போத்தனூர் – 4.1
சரவணம்பட்டி – 3.82
ஒண்டிப்புதூர் – 2.56
பொள்ளாச்சி – 2.5
வால்பாறை – 2.1
காந்திபுரம் – 1.58
கவுண்டம்பாளையம் – 1.72
மற்றும் பல பகுதிகள் 0.6 முதல் 2.4 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம்:
சித்திரன் கோடு – 15.7
பொன்மனை – 13.8
தும்பகோடு – 11.8
மைலார் – 8.3
தேனி மாவட்டம்:
ராஜாதானி – 13.8
பாலக்கோம்பை – 11.5
திம்மரசநாயக்கனூர் – 8.9
இதர மாவட்டங்கள்:
திருச்சி – 10.8, கண்ணனூர் – 10.3
திருப்பூர் (வேலராசிகாபாளையம் – 10.8, அருள்புரம் – 10.1, கண்டியன் கோவில் – 9.6)
தூத்துக்குடி (செட்டிக்குறிச்சி – 9.32)
விழுப்புரம் (சித்தம்பூண்டி – 8.7)
வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் இந்தத் தொடர் மழை பொதுமக்களுக்கு குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது.