சென்னை: 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (பிப்.,12) சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு கிராம் ரூ.7,940 க்கும் ஒரு சவரன் ரூ.63,520 க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில வாரங்களாகவே தொடர் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை நகை பிரியர்களுக்கும் தங்க முதலீட்டாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது. அதன் உச்சமாக நேற்று ஒரு ஒரு கிராம் ரூ 8,060 கும் ஒரு சவரன் புதிய உச்சமாக ரூ 64,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு கிராம் ரூ.7,940 - க்கும், ஒரு சவரன் ரூ.63,520 - க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 960 குறைந்துள்ளது நகை பிரியர்களுக்கும் தங்க முதலீட்டாளர்களுக்கும் சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.