நன்மைகள்:
மா இஞ்சி சாதம் செரிமானத்திற்கு நல்லது, குமட்டல் மற்றும் தலைச்சுற்றலைக் கட்டுப்படுத்தவும் இது பயன்படுகிறது. எனவே இது சிறந்த பயண உணவாக பயன்படுகிறது. மேலும் இருமல் மற்றும் எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த சிகிச்சையாக வெறும் வயிற்றில் தேன் மாம்பழ இஞ்சியை எடுத்துக்கொள்வது கொழுப்பை எரிக்கிறது.
காய்ச்சல், ஆஸ்துமா மற்றும் வயிற்று கோளாறுகளை போக்க இது பெருமளவில் உதவுகிறது. இந்த இஞ்சியை ஊறுகாய், சட்னி மற்றும் சாஸ்களில் பயன்படுத்தலாம். இதை யுனானி மருத்துவத்திலும் பெருமளவில் பயன்படுத்துகின்றனர்
தேவையான பொருட்கள்:
உதிராக வடித்த சாதம் - 2 கப்,
தோல் நீக்கி துருவிய மாங்காய் இஞ்சி துருவல் - அரை கப்,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுந்து - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு
பொடிக்கு :
உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்,
கடலைப் பருப்பு - அரை டேபிள் ஸ்பூன்,
தனியா - 2 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் - 3,
எண்ணெய் - 3 டீஸ்பூன்
செய்முறை:
1. ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில், மாங்காய், இஞ்சி துருவல், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
2. நன்றாக சூடு ஆறிய பிறகு இதை கரகரப்பாக அரைத்தெடுங்கள்.
3. பின்பு பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிவக்க வறுத்து போடி செய்து கொள்ளுங்கள்.
4. மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை தாளியுங்கள்.
5. பின்பு எடுத்து வைத்துள்ள உதிராக வடித்த சாதத்தில் அரைத்த விழுது, பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, தாளிதக் கலவை, எலுமிச்சம் சாறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் நன்றாக கலக்குங்கள்.
6. அவ்வளவுதான் மா இஞ்சி சாதம் ரெடி. இப்பொழுது சூட்டோடு எடுத்து பரிமாறுங்கள்.