இந்தியர்கள் அதிகம் செல்லும் டாப் 10 வெளிநாடுகள்
இந்தியர்கள் தொழில், கல்வி, மருத்துவம், சுற்றுலா போன்ற காரணங்களுக்காக பல்வேறு வெளி நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார்கள். இவற்றில் மிகவும் புகழ்பெற்ற, இந்தியர்களின் உள்ளம் கவர்ந்த டாப் 10 வெளிநாடுகள் பற்றியும், செல்வதற்கு என்ன கரணம் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம் வாங்க.
தாய்லாந்து (Thailand): பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தாய்லாந்து. அதிகமான இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு உள்ள அழகான இடங்கள், கலாச்சாரங்கள், அமைதியான சூழல் போன்றவையே இந்தியர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
பாலி (Bali): இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு தீவு இது. இங்குள்ள வித்தியாசமான கட்டிடங்கள், மிகப் பழமையான கோவில்கள், அழகிய சுற்றுலா தலங்கள், இயற்கை காட்சிகள் போன்ற காரணங்களால் இந்தியர்களின் விருப்பமான நாடுகளின் பட்டியலில் இது இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
சிங்கப்பூர் (Singapore): வேலை, சுற்றுலா ஆகிய காரணங்களுக்காக அதிகமான இந்தியர்கள் செல்லும் நாடாக இருப்பது சிங்கப்பூர். அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் வேலை வாய்ப்புகள் நிறைந்து இருப்பதால் அதிகமான இந்தியர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல அதிகம் விரும்புகிறார்கள்
மலேசியா (Malaysia): சிங்கப்பூருக்கு அருகில் இருப்பதால் அங்கு செல்பவர்களில் பெரும்பாலானோர் இங்கும் சென்று விட்டு திரும்புகிறார்கள். மேலும் சுற்றுலா என்றாலே பெரும்பாலான இந்தியர்கள் மனதில் தோன்றும் நாடு மலேசியா தான். முக்கியமான தொழில் நகரமான மலேசியாவில் எஸ்டேட்கள் அதிகம். இந்தியர்கள் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் தேடி மலேசியாவிற்கு அதிகம் செல்கின்றனர்.
லண்டன் (London): இங்குள்ள குளிரான தட்ப வெப்ப நிலை தேனிலவு செல்லும் தம்பதிகளின் முக்கிய தேர்வாக உள்ளது. மேலும் கல்வி, சுற்றுலா, வேலை போன்ற பல காரணங்களுக்காக அதிகம் பயணிக்கும் இந்தியர்களின் விருப்ப நாடக உள்ளது.
மாலத்தீவு(Maldives): நண்பர்களுடன் சுற்றுலா செல்வதாக இருந்தால் அவர்களின் முதல் தேர்வாக இருப்பது மாலத்தீவு தான். இந்திய பிரபலங்கள் குடும்பத்துடன் ஓய்வெடுக்க அதிகம் செல்வது இங்கு தான். கடற்கரை பிரியர்களின் ஃபேவரைட் நாடு.
ஐக்கிய அரபு எமிரெட்ஸ் (United Arab Emirates): அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கும் நாடாக இருப்பது ஐக்கிய அரபு எமிரெட்ஸ். குறிப்பாக கேரளா, தமிழ்நாடு போன்ற தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் அதிகம் வேலை தேடி பயணிக்கும் நாடாக இருப்பது UAE. பெண்களுக்கு பாதுகாப்பு இங்கு அதிகம் என்பதால் குடும்பத்துடன் செல்ல நினைப்பவர்களின் முதல் விருப்பமாக இருப்பது கூடுதல் சிறப்பு.
வியட்நாம் (Vietnam): பக்தி சுற்றுலா, பேச்சுலர்கள் தனியாக சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வருவதற்கு என்று சரியான தேர்வாக இருக்கும் நாடு வியட்நாம். இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்று என்பதால் இங்கு தொழில் வாய்ப்புகள் அதிகம்.
கம்போடியா (Cambodia): மிகப்பெரிய ஆலயங்கள், பழமையான கட்டிடங்கள், பழமையான கோவில்கள் அதிகம் நிறைந்துள்ள நாடாக இருப்பது கம்போடியா. மன அமைதிக்காக இந்தியர்கள் அதிகம் விரும்பும் சுற்றுலாத் தலமாகவும் இருந்து வருகிறது. தொல்லியல் ஆய்விற்கான இங்கு செல்பவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பார்கள்.
அமெரிக்கா (USA): வெளிநாடு என்றாலே அமெரிக்கா தான் என்ற எண்ணம் இன்றும் நிறைய பேருக்கு இருக்கும். அப்படிப்பட்ட அமெரிக்காவில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பும் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிற்கு பயணம் இந்தியர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. மாணவர்கள் உயர் கல்விக்காக செல்லும் நாடுகளில் அமெரிக்கா முதல் விருப்பம்.
இதையும் படிங்க: இந்தியர்கள் அதிகம் விரும்பும் வெளிநாடுகள் இதுதானா?