தோல்வி என்பது வெற்றிக்கு முதல்படி. அதை கடந்து தான் வெற்றி என்ற இரண்டாவது படியில் காலடி எடுத்து வைக்க முடியும். அப்படி கஷ்டப்பட்டு ஏறிய படியிலிருந்து மேலும் மேலும் முன்னேறி தான் செல்ல வேண்டுமே தவிர மீண்டும் கீழே இறங்க கூடாது என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும்.
அப்படி மீண்டும் அடுத்தடுத்த வெற்றி படிகளில் ஏற, வெற்றியாளர்கள் மீண்டும் வெற்றியாளர்களாகவே தொடர அவர்களுடைய தினசரி பழக்கவழக்கங்களை எப்படி பின்பற்றுகிறார்கள் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருக்கும். அதற்கான தேடலே இந்த கட்டுரை. அதை கீழே பார்க்கலாம்.
தினமும் பின்பற்றும் 7 பழக்கங்கள்:
1. அதிகாலையில் எழுவது: இது மிக மிக முக்கியமான ஒன்று. இதுவே உங்களது தனிப்பட்ட வளர்ச்சிக்கு மட்டுமன்றி, அந்த நாளின் வெற்றிக்கும் முதல் காரணம். அதிகாலையில் எழுவதால் சுறுசுறுப்பான உடல் இயக்கம் இருப்பதுடன், உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் வேலைகளை திட்டமிடல், உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குதல் அதனால் சரியான நேரத்திற்கு பசி, இரவில் நல்ல தூக்கம் என அடுத்தடுத்த வேலைகளுக்கு இதுவே மூல காரணமாக உள்ளது. மேலும் உங்கள் நாள் ரிலாக்ஸ் ஆக தொடங்குவதுடன் வேலைகளை கன கச்சிதமாக முடிக்கவும் முடியும்.
2. கண்டிப்பாக தினமும் 20 முதல் 30 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உங்களை உடல் அளவில் மட்டுமன்றி மனதளவிலும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
3. அன்றைய தினத்திற்கான இலக்கு என்ன என்பதை முடிவு செய்து, அதற்கான சரியான திட்டமிடலை மேற்கொள்ளுங்கள். திட்டமிட்டதை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்பது முக்கியம்.
3. தினமும் அவ்வப்போது தண்ணீர் குடியுங்கள். கண்டிப்பாக 3 லிருந்து 4 லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்குள் நீங்கள் உட்கொண்டிருக்க வேண்டும். இது உங்கள் உடல் பாகங்களின் செயல்பாட்டை நன்றாக வைத்திருக்க உதவுவது முதல் தேவையற்ற பல வியாதிகளிலிருந்து தப்பித்து உங்கள் இலக்கை நோக்கிய பயணத்திற்கு அதிக நேரம் கிடைக்கும்.
4. தினசரி புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளுங்கள். அது உங்கள் துறை சார்ந்ததாகவோ, அல்லது பொதுவானதாகவோ இருக்கலாம். அப்போது தான் உங்கள் மூளை எப்போதும் ஆக்டிவாக இருப்பதுடன், உங்கள் மீது உங்களுக்கே ஒரு நம்பிக்கையை கொடுக்கும்.
5. குடும்பத்துடன் குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவிடுங்கள். இந்த நேரத்தில் கண்டிப்பாக குடும்ப உறுப்பினர்களின் அன்றைய நாள் பற்றிய அல்லது ஆரோக்கியமான உரையாடல்கள் இருப்பது அவசியம். அந்த நேரத்தில் டிவி, செல்போன் போன்ற சாதனங்களுக்கு கண்டிப்பாக தடை.
6. அன்றைய நாளில் உங்களுக்கு கிடைத்த நல்ல மற்றும் கெட்ட அனுபவம், அன்றைய நாளுக்கான இலக்கின் நிலையை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
7. அவசியமற்ற செல்போன் பயன்பாட்டை குறைத்து சீக்கிரம் தூங்க செல்ல வேண்டும். உங்கள் தூக்கம் தினமும் அவசியம் 8 மணி நேரம் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இது அடுத்த நாளை சரியான பாதையில் கொண்டு செல்ல வழிவகுக்கும்.
இந்த 7 பழக்கங்கள் கண்டிப்பாக உங்களை மேலும் வெற்றியாளராக தொடர செய்யும். இதை கடைபிடித்து பாருங்கள். வெற்றி நிச்சயம் !!!.
#Daily Habits That Never Let You Fail #motivational quotes #daily motivation