திருக்குறள் முன்னுரை

By News Dsk

திருக்குறள் சங்க காலத்தைச் சேர்ந்த இலக்கியம். இது பதினென்கீழ்க்கனக்கு எனப்படும், பதினெட்டு நூல்களில் ஒன்று. திருக்குறள் என்பது இவ்விலக்கியத்தின் இயற்பெயர் அல்ல என்றும் இதில் உள்ள பாடல்கள் குறள் வெண்பா வடிவில் உள்ளதால் திருக்குறள் என்ற பெயர் பெற்றது என்றும் கூறப்படுகிறது. இதை இயற்றியவரின் பெயர் உறுதியாக கண்டறியப்படவில்லை என்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இதை இயற்றியவர் வள்ளுவ மரபைச் சேர்ந்தவர் என்றும் அதனால் அவர் திருவள்ளுவர் என்ற பெயர் பெற்றார் என்றும் கூறப்படுகிறது.

திருக்குறள் அறம், பொருள் மற்றும் காமம் (இன்பம்) என்று மூன்றுப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாலும் பல இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் பல அதிகாரங்களை கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 குறள்கள் உள்ளன. ஆக மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.

பால் - 3
இயல் - 13
அதிகாரம் - 133
குறள் - 1330

திருக்குறள் ஓர் வாழ்வியல் நூல். இந்நூலில் வாழ்வின் எல்லா அங்கத்தையும் கூறியுள்ளது. இதில் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்கவேண்டிய நன்னெறியை மிக சுருக்கமாகவும், எக்காலத்திற்கும் ஏற்கக்கூடிய வகையிலும் கூறப்பட்டுள்ளது.

திருக்குறளுக்கு உலகப் பொது மறை, தெய்வநூல், தமிழ் மறை, பொய்யாமொழி என்று பல சிறப்புப் பெயர்கள் உண்டு. உலகிலேயே மிக அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் ஒன்றாக இந்நூல் உள்ளது.

பல பேரறிஞர்கள் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளனர். அதில் பரிமேலழகர் மற்றும் மு.வரதராசனார் ஆகியோரின் உரைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டப்படுகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE