ஆண்டாள் திருப்பாவை பாடல் 11 (மார்கழி 11-ம் நாள்): குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!

By News Dsk

ஆண்டாள் திருப்பாவை 11:

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்!

பொருள்: "கன்றுடன் இருக்கும் பசுக்களிடமிருந்து பால் கறக்க தெரிந்தவனும், பகைவர்களின் செருக்கை அழித்து அவர்களை வெற்றிகொள்பவனும், குற்றம் குறை சொல்ல முடியாத தூய்மையான குணம் கொண்ட கோபாலனை அடைய நினைக்கும் கொடி மற்றும் புற்றில் இருக்கும் பாம்பை போல் போன்ற மெலிந்த தேகத்தை உடைய பெண்ணே! மயில் போன்ற வசீகரிக்கும் அழகை உடையவளே! நம்முடைய எல்லா தோழிகளும் உன் வீட்டு வாசலில் கூடி நின்று கார்முகில் வண்ணனான கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருப்பதை கேட்டும் கேளாதது போல அசையாமலும், பேசாமலும் உறங்கிக் கொண்டிருக்கும் செல்வ சீமாட்டியே! பொருளற்ற இவ்வுறக்கத்திற்கு காரணம் என்ன? " என்று ஆண்டாள் தன் தோழியை வினவி எழுப்புகிறாள்.

இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE