ஆண்டாள் திருப்பாவை பாடல் 16 (மார்கழி 16-ம் நாள்): தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடு!

By News Dsk

ஆண்டாள் திருப்பாவை 16:

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்!

பொருள்: எங்களுடைய தலைவனான நந்தகோபனின் கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசலில் இருந்து அவன் திருமாளிகையை காக்கும் காவலனே! ஆயர்குல சிறுமியர்களான எங்களுக்கு இந்த மாளிகையின் கதவைத் திறப்பாயாக!. மாயங்களை புரிபவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக சொல்லியிருக்கிறான். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாடி பறையைப் பெற்றுச் செல்ல நாங்கள் நீராடி தூய்மையாக வந்திருக்கிறோம். மறுப்பேதும் சொல்லாமல் மூடியுள்ள இந்த நிலைக் கதவை திறந்து எங்களுக்கு வழிவிடுவாயாக.

இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE