ரிஷபம்: பிப்ரவரி மாத ராசி பலன் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்)

By News Dsk

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்)

ரிஷப ராசி அன்பர்களே,

இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் லாபஸ்தானத்தில் உச்சமாக இருக்க ராகு இணைந்திருக்க நல்ல யோகத்தில் இருக்கிறீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். அதிருப்தி நீங்கி வாழ்க்கையில் பிடிப்பு உண்டாகும். சுபகாரியங்கள் கூடி வரும். இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். எதிர்பாராத திடீர் நல்ல செலவு ஏற்படும்.

கணவன், மனைவி இடையே மனம் விட்டு பேசிக்கொள்வது நன்மை தரும். நீண்ட நாள் எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். குடும்பத்தில் பண வரத்து கூடும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நன்மை பயக்கும்.

தொழில், வியாபாரத்தில் சுபச் செலவு ஏற்படும். புதிய ஆர்டர்களால் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்துடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் உண்டாகலாம்.

கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்சினை தீர்ந்து வருமானம் கணிசமாக உயரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும் மதம் இது.

அரசியல் துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியம் ஒன்று திடீரென சாதகமாக நடந்து முடியும்.

வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தேர்வுகளில் சாதிக்க வேண்டும் என்ற சிந்தனை மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள் தேடி வரும்.

பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு - இல்லத்தில் செல்வமும், மகிழ்ச்சியும் உண்டாகும்

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

சந்திராஷ்டம் தினங்கள்: 23, 24

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17

மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE