இன்றைய தினம்: 25-Mar-2026 ஜோதிட நாட்காட்டி மற்றும் ராசி பலன்கள்

By News Dsk

விசுவாவசு வருடம், பங்குனி மாதம் 11 ம் நாள்,

2026ம் வருடம், மார்ச் மாதம் 25 ம் தேதி, புதன்கிழமை

------------------------------------------------------------------------------

சூரிய உதயம்: காலை 06 மணி 16 நிமிடங்கள்

------------------------------------------------------------------------------

இன்றைய நட்சத்திரம்: மாலை 08:34 வரை மிருகசீரிடம் பின்பு திருவாதிரை

சந்திராஷ்டமம்: விசாகம் அனுஷம் நட்சத்திரங்கள்

சூலம்: வடக்கு திசை

------------------------------------------------------------------------------

இன்று நல்ல நேரம்:

காலை: 09:30 மணி முதல் 10:30 மணி வரை

மாலை: 04:30 மணி முதல் 05:30 மணி வரை

இராகு காலம்: மதியம் 12.00 மணி முதல் 01.30 மணி வரை

எமகண்டம்: காலை: 07.30 மணி முதல் 09.00 மணி வரை

------------------------------------------------------------------------------

இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தின் மீது அதிக பற்று வரும். எதையும் திட்டமிட்டு செய்தால் எளிதில் வேலை முடியும். தூர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

ரிஷப ராசி நேயர்களே, விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தேவையற்ற விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மிதுன ராசி நேயர்களே, குடும்ப நபர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். எதிரிகளின் பலம் இழந்து நிற்பர். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே, புதிய திட்டங்களை நிறைவேற்ற முடியும். உடல் உபாதைகள் நீங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சிம்ம ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகள் தீரும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி ராசி நேயர்களே, குடும்ப செல்வாக்கு உயரும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியபாரத்தில் இருந்த போட்டி குறையும்.

துலாம் ராசி நேயர்களே, நிதானமான செயல்களால் நன்மைகள் பல உண்டு. தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்கவும். வேண்டியவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். உடல் சோர்வு அகன்று உற்சாகம் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மகர ராசி நேயர்களே, பொருளாதார நிலை சீராகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்திற்கு தேவையானது கிடைக்கும். தியானம் மன நிம்மதியை தரும். பெண்கள் வழியில் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரிய வரும்.

மீன ராசி நேயர்களே, குடும்ப கஷ்டங்கள் படிப்படியாக குறையும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும் இன்று !!!

------------------------------------------------------------------------------

இன்றைய சிறப்பு:

சுபமுகூர்த்த நாள்...

கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள் இன்று!!!

------------------------------------------------------------------------------

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE