மிதுனம்: பிப்ரவரி மாத ராசி பலன் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

By News Dsk

மிதுனம்: (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

மிதுன ராசி அன்பர்களே,

ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்திலிருக்கிறார். மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களின்
பிரச்சினைகளில் அவசியமின்றி தலையிடுவது உங்களுக்கே பாதகமாக அமையும். தவிர்ப்பது நல்லது. இனிமையான பேச்சால் காரியங்கள் கைகூடி வரும். சொத்து சம்பந்தமான காரியங்களில் சிறிது தாமதம் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறையும். உறவினர்கள் வழியில் உபசரிப்புகள் நடக்கும். பெண்கள் எந்த காரியத்தில் ஈடுபடும் முன்னும் சரியாக திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரத்து எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது.

கலைத் துறையினருக்கு வேலை பளு குறையும். வெளியூர் பயணங்கள் தீடீரென ஏற்படும். திடீர் செலவு உண்டாகும்.

அரசியல் துறையினருக்கு இருந்த கெட்ட சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். எல்லா காரியங்களும் இனிதே நடக்கும்.

தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் இருந்தாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். எடுத்த வேலையை சரியான நேரத்தில் முடிக்க திட்டமிடுவது உங்கள் மதிப்பை உயர்த்தும். பணி நிமிர்த்தமான பயணங்களில் அனுகூலம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாற கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: ராமரை வணங்க நண்மை உண்டாகும். ஆரோக்கியம் உண்டாகும்

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

சந்திராஷ்டம் தினங்கள்: 25, 26

அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE