இன்றைய தினம்: 27-Mar-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

By News Dsk

விசுவாவசு வருடம், பங்குனி மாதம் 13 ம் நாள்,

2026ம் வருடம், மார்ச் மாதம் 27 ம் தேதி, வியாழக்கிழமை

------------------------------------------------------------------------------

சூரிய உதயம்: காலை 06 மணி 15 நிமிடங்கள்

------------------------------------------------------------------------------

இன்றைய நட்சத்திரம்: மாலை 05:48 வரை புனர்பூசம் பின்பு பூசம்

சந்திராஷ்டமம்: கேட்டை மூலம்

சூலம்: மேற்கு திசை

------------------------------------------------------------------------------

இன்று நல்ல நேரம்:

காலை: 09:30 மணி முதல் 10:30 மணி வரை

மாலை: 04:30 மணி முதல் 05:30 மணி வரை

இராகு காலம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

எமகண்டம்: மதியம்: 03.00 மணி முதல் 04.30 மணி வரை

------------------------------------------------------------------------------

இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி நேயர்களே, பொருளாதார நெருக்கடிகள் வெகுவாக குறையும். உடல் நலனில் கவனம் தேவை. பெரியோர்களின் அறிவுரை பயனளிக்கும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்திற்காக சில தியாகம் வேண்டி வரும். பேச்சில் நிதானம் அவசியம். நெருங்கிய நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

மிதுன ராசி நேயர்களே, குடும்ப பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு வரும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

கடக ராசி நேயர்களே, கடவுள் பக்தி இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உதிக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

சிம்ம ராசி நேயர்களே, குடும்ப சுமை நாளுக்கு நாள் கூடும். அனாவசிய செலவுகளை குறைக்க பார்க்கவும். அரைகுறையாக நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். புது தொழில் யோகம் அமையும்.

கன்னி ராசி நேயர்களே, நம்பிக்கையுடன் புதிய முயற்சியில் ஈடுபட முடியும். மன பாரம் குறையும். பிரியமானவர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

துலாம் ராசி நேயர்களே, புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உற்றார், உறவினர்கள் அன்பு பாராட்டுவர். தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே, பழைய கசப்பான சம்பவங்களை மறக்க முயற்சிக்கவும். பல நல்ல மனிதர்களின் தொடர்பு கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

தனுசு ராசி நேயர்களே, உங்களால் சுற்றி இருப்பவர்கள் ஆதாயமடைவர். அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மகர ராசி நேயர்களே, பல நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடிவரும்.

மீன ராசி நேயர்களே, மன தைரியம் அதிகரிக்கும். கையில் எடுத்த வேலையை முடிக்க முடியும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும் இன்று.

------------------------------------------------------------------------------

இன்றைய சிறப்பு:

ஸ்ரீராமநவமி...

ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று!!!

------------------------------------------------------------------------------

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE