இன்றைய தினம்: 28-Mar-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

By News Dsk

விசுவாவசு வருடம், பங்குனி மாதம் 14 ம் நாள்,

2026ம் வருடம், மார்ச் மாதம் 28 ம் தேதி, வியாழக்கிழமை

------------------------------------------------------------------------------

சூரிய உதயம்: காலை 06 மணி 15 நிமிடங்கள்

------------------------------------------------------------------------------

இன்றைய நட்சத்திரம்: மாலை 04:46 வரை பூசம் பின்பு ஆயில்யம்

சந்திராஷ்டமம்: மூலம் பூராடம்

சூலம்: கிழக்கு திசை

------------------------------------------------------------------------------

இன்று நல்ல நேரம்:

காலை: 07:30 மணி முதல் 08:30 மணி வரை

மாலை: 04:30 மணி முதல் 05:30 மணி வரை

இராகு காலம்: காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: மதியம்: 01.30 மணி முதல் 03.00 மணி வரை

------------------------------------------------------------------------------

இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். முன்கோபத்தை குறைக்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே, குடும்ப மரியாதையை உயர்த்த முடியும். உறவினர்கள் வழியில் ஆதரவு பெருகும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மிதுன ராசி நேயர்களே, குடும்ப பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு வரும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

கடக ராசி நேயர்களே, குடும்பத்தாரிடம் அன்பாக நடத்துக்கொள்ளவும். மனதிற்கு பிடித்தமான காரியங்களை செய்ய முடியும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி நேயர்களே, குடும்பதில் சற்று நிம்மதி குறைந்து காணப்படும். உறவினர்கள் பாச மழை பொழிவர். அவசர தேவைக்கு கடன் வாங்க நேரிடும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.

கன்னி ராசி நேயர்களே, யாரிடத்திலும் பகைமையை வளர்க்க வேண்டாம். செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்கவும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

துலாம் ராசி நேயர்களே, வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு செலவழிக்க வேண்டாம். புது நட்பால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

விருச்சிக ராசி நேயர்களே, வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். பயனளிக்காத விஷயங்களில் ஆர்வம் காட்ட வேண்டாம். பெற்றோர்களிடம் விவாதம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

தனுசு ராசி நேயர்களே, வேண்டியவர்களுக்கு உதவி செய்ய நேரிடும். திருமண காரியம் விரைவில் கைகூடும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மகர ராசி நேயர்களே,பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

கும்ப ராசி நேயர்களே, பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். கோபமும், பிடிவாதமும் உங்கள் பலத்தை குறைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மீன ராசி நேயர்களே, புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். யாருடனும் உங்கள் ஒப்பிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் கூடும் இன்று.

------------------------------------------------------------------------------

இன்றைய சிறப்பு:

தர்மராஜ தசமி , இஷ்ட தெய்வ வழிபாட்டுக்கு உகந்த தினம் ....

ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று !!!

------------------------------------------------------------------------------

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE