விசுவாவசு வருடம், பங்குனி மாதம் 16 ம் நாள்,
2026 - மார்ச் - 30 ம் தேதி, திங்கட்கிழமை
------------------------------------------------------------------------------
சூரிய உதயம்: காலை 06 மணி 14 நிமிடங்கள்
------------------------------------------------------------------------------
இன்றைய நட்சத்திரம்: மாலை 03:47 வரை மகம், பின்பு பூரம்
சந்திராஷ்டமம்: உத்திராடம் திருவோணம்
சூலம்: கிழக்கு திசை
------------------------------------------------------------------------------
இன்று நல்ல நேரம்:
காலை: 06:30 மணி முதல் 07:30 மணி வரை
மாலை: 04:30 மணி முதல் 05:30 மணி வரை
இராகு காலம்: காலை 07:30 மணி முதல் 09.00 மணி வரை
எமகண்டம்: மதியம்: 10.30 மணி முதல் 12.00 மணி வரை
------------------------------------------------------------------------------
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். வீண் அலைச்சலால் சோர்வு ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிச்சியான சூழல் நிலவும். சம்மதமில்லாத விஷயங்களில் ஈடுபட வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
மிதுன ராசி நேயர்களே, மனதில் இருந்த குழப்பங்கள் அகலும். நண்பர்கள் வழியில் ஆதரவுப் பெருகும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் அநாவசியச் செலவுகளை தவிர்க்கவும். தொலைதூரத்திலுருந்து நல்ல தகவல்கள் வரும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
சிம்ம ராசி நேயர்களே, பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும். புது நண்பர்களுடன் நல்லுறவு ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கன்னி ராசி நேயர்களே, திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். தாழ்வு மனப்பான்மை எண்ணத்தை நீக்கவும். தூர பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறக்கும்.
துலாம் ராசி நேயர்களே, நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். அடுத்தவர் நலனுக்காக உழைக்க வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே, ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவது நல்லது. எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். புது தொழில் யோகம் அமையும்.
தனுசு ராசி நேயர்களே, குடும்பப் பொறுப்புணர்ந்து செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. எதிரிகள் விலகியே நிற்பர். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
மகர ராசி நேயர்களே, புத்தி சாதுரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்ப ராசி நேயர்களே, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிரமம் இருக்கும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
------------------------------------------------------------------------------
இன்றைய சிறப்பு:
பிரதோஷம்....
நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள் இன்று !!!
------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!