இன்றைய தினம்: 08-Apr-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

By News Dsk

விசுவாவசு வருடம், பங்குனி மாதம் 25 ம் நாள்,

2026ம் வருடம், ஏப்ரல் மாதம் 08 ம் நாள், புதன்கிழமை

------------------------------------------------------------------------------

சூரிய உதயம்: காலை 06 மணி 07 நிமிடங்கள்

------------------------------------------------------------------------------

இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 04:54 வரை கேட்டை பின்பு மூலம்

சந்திராஷ்டமம்: ரோகிணி

சூலம்: வடக்கு திசை

------------------------------------------------------------------------------

இன்று நல்ல நேரம்:

காலை: 09:30 மணி முதல் 10:30 மணி வரை

மாலை: 04:30 மணி முதல் 05:30 மணி வரை

இராகு காலம்: மதியம் 12.00 மணி முதல் 01.30 மணி வரை

எமகண்டம்: காலை: 07.30 மணி முதல் 09.00 மணி வரை

------------------------------------------------------------------------------

இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி நேயர்களே, குடும்ப பிரச்சனைகள் வெகுவாக குறையும். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியும். புதிய முயற்சிகளை தள்ளி போடவும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே, குடும்ப பொறுப்புகளில் அதிக கவனம் தேவை. தெய்வ பக்தி அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.

கடக ராசி அன்பர்களே, புது நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். உடல் நலனில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

சிம்ம ராசி நேயர்களே, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி ராசி நேயர்களே, பிரியமானவர்களின் அன்பும், பாசமும் கிட்டும். பிடிவாத போக்கை தளர்த்திகொள்ளவும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்ப ஒற்றுமை பலப்படும். புதிய நபர்களின் சிநேகிதம் கிடைக்கும். பண வரவில் சின்ன சிக்கல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

விருச்சிக ராசி நேயர்களே, மனநிம்மதிக்காக தியானம் செய்யவும். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமின்றி நடக்கும். தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மகர ராசி நேயர்களே, எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். ஒதுங்கி நின்றவர்கள் கூட விரும்பி வந்து இணைவர். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம்,. உத்யோக மாற்றம் ஏற்படும்.

கும்ப ராசி நேயர்களே, குடும்ப நபர்கள் பக்கபலமாக இருப்பர். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் பழகவும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

மீன ராசி நேயர்களே, எதிர்த்து நின்றவர்கள் கூட விலகி நிற்பர். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

------------------------------------------------------------------------------

இன்றைய சிறப்பு:

தேய்பிறை ஷஷ்டி விரதம்...

கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள் !!!

------------------------------------------------------------------------------

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE