இன்றைய தினம்: 10-Apr-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

By News Dsk

விசுவாவசு வருடம், பங்குனி மாதம் 27 ம் நாள்

2026ம் வருடம், ஏப்ரல் மாதம் 10 ம் நாள், வெள்ளிக்கிழமை


சூரிய உதயம்: காலை 06 மணி 06 நிமிடங்கள்


இன்றைய நட்சத்திரம்: காலை 09:27 AM வரை பூராடம் பின்பு உத்திராடம்

சந்திராஷ்டமம்: திருவாதிரை

சூலம்: மேற்குதிசை


இன்று நல்ல நேரம்:

காலை: 09:30 மணி முதல் 10:30 மணி வரை

மாலை: 04:30 மணி முதல் 05:30 மணி வரை

இராகு காலம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

எமகண்டம்: மதியம்: 03.00 மணி முதல் 04.30 மணி வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி நேயர்களே, குடும்ப கஷ்டங்கள் படிப்படியாக குறையும். பிரியமானவர்களின் ஆதரவு பெருகும். எதிர்த்து நின்றவர்கள் கூட ஒதுங்கியே நிற்பர். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே, புதிய முயற்சிகள் சிறப்பாக அமையும். தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். நெருங்கிய உறவினர்கள் இல்லம் நாடி வருவர். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். அயல்நாடு சென்று வரும் யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். மன வலிமை கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி ராசி நேயர்களே, புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த குழப்ப நிலை நீங்கும். உற்றார், உறவினர்கள் உறுதுணையாக இருப்பர். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உணவு கட்டுப்பாடு அவசியம். யாரையும் நம்பி உறுதி மொழி தரவேண்டாம். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்ப பொருளாதார நிலை உயரும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். திருமண காரியம் விரைவில் கைகூடும். உத்யோகத்தில் கவனம் தேவை.

மகர ராசி நேயர்களே, தியானத்தால் மன அமைதி பெரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். நண்பர்களுடன் சின்ன விரிசல்கள் வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

கும்ப ராசி நேயர்களே,சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். பணம் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பயணங்களால் உடல் அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மீன ராசி நேயர்களே, மனதில் புதிய தெம்பும், உற்சாகமும் பிறக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.


இன்றைய சிறப்பு:

அஷ்டமி...

ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று!!!


உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE