இன்றைய தினம்: 15-Apr-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

By News Dsk

பராபவ வருடம், சித்திரை மாதம் 02 ம் நாள்,

2026 ம் வருடம், ஏப்ரல் 15 ம் நாள், புதன்கிழமை


சூரிய உதயம்: காலை 06 மணி 03 நிமிடங்கள்


இன்றைய நட்சத்திரம்: பகல் 01:33 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி

சந்திராஷ்டமம்: மகம் பூரம்

சூலம்: வடக்கு


இன்று நல்ல நேரம்:

காலை: 09:30 முதல் 10:30 வரை

மாலை: 04:30 முதல் 05:30 வரை

இராகு காலம்: மதியம் 12.00 முதல் 01.30 வரை

எமகண்டம்: காலை: 07.30 முதல் 09.00 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி நேயர்களே, வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளிடம் மனக்கசப்புகள் வரும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். புது முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுன ராசி அன்பர்களே,குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். பண தேவைகள் அதிகரிக்கும். பழைய இனிமையான நினைவுகள் ஞாபகத்திற்கு வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கடக ராசி அன்பர்களே, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். எதையும் வெளிப்படையாக பேசுவதால் பிரச்சனைகள் வரும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்ம ராசி நேயர்களே,மற்றவர்கள் விமர்சனங்களுக்கு செவி சாய்க்க வேண்டாம். தேக ஆரோக்கியம் பலம் பெரும். பெற்றோர்களின் அரவணைப்பு கிட்டும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். சிக்கனத்தை கடைப்பிடித்து சேமிக்க தொடங்கவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே, வருங்காலம் பற்றிய சிந்தனை அதிகமாகும். திட்டமிடாத செலவுகள் நிறைய வரும். தூர பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

விருச்சிக ராசி நேயர்களே,குடும்பத்தாரின் அன்பை பெற முடியும். பேச்சில் கவனம் தேவை. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

தனுசு ராசி நேயர்களே, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். அடுத்தவரின் கருத்தை ஏற்க தயக்கம் வரும். எதிரிகளின் தொல்லை குறையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மகர ராசி நேயர்களே, புது முயற்சியில் இருந்து வந்த தடைகள் விலகும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே,நல்ல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

மீன ராசி நேயர்களே, ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு வரும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். நட்பு வழியில் பல நன்மைகள் வந்து சேரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.


இன்றைய சிறப்பு:

பிரதோஷம்...

மாத சிவராத்திரி....

கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE