இன்றைய தினம்: 16-Apr-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

By News Dsk

பராபவ வருடம், சித்திரை மாதம் 03 ம் நாள்,

2026 ம் வருடம், ஏப்ரல் 16 ம் நாள், வியாழக்கிழமை


சூரிய உதயம்: காலை 06 மணி 03 நிமிடங்கள்


இன்றைய நட்சத்திரம்: பகல் 01:00 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி

சந்திராஷ்டமம்: பூரம் உத்திரம்

சூலம்: தெற்கு


இன்று நல்ல நேரம்:

காலை: 10:30 முதல் 11:30 வரை

மாலை: 12:30 முதல் 01:30 வரை

இராகு காலம்: மதியம் 01.30 முதல் 03.00 வரை

எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி நேயர்களே, குடும்ப விவகாரங்களில் கவனமாக இருக்கவும். பிரியமானவர்கள் வழியில் நல்ல செய்தி வரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே, எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். பயணங்களால் வீண் அலைச்சல் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

மிதுன ராசி அன்பர்களே,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும். புது முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். எதையும் தாங்கும் மனவலிமையை உண்டாகும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

சிம்ம ராசி நேயர்களே,குடும்பத்தில் அனுசரித்து போவது நல்லது. தனிப்பட்ட ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி ராசி நேயர்களே, புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும். பெரியோர்களின் ஆதரவும், ஆசியும் கிட்டும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

துலாம் ராசி நேயர்களே, கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே,குடும்பத்தில் மகிழ்ச்சி தருணங்கள் அதிகமாகும். பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பர். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் பல புதுமைகள் நடக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே, எதிர்கால நலன் கருதி சேமிப்பில் ஈடுபடவும். அந்தஸ்தானவர்களின் தொடர்பால் பல நன்மைகள் கிடைக்கும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பாராட்டு மழை உண்டு.

கும்ப ராசி நேயர்களே,குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். எதிரிகள் பலமிழந்து நிற்பர். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

மீன ராசி நேயர்களே, குடும்ப சுமை அதிகரிக்கும். யாருடனும் உங்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.


இன்றைய சிறப்பு:

சுபமுகூர்த்த நாள்...

மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE