பராபவ வருடம், சித்திரை மாதம் 04 ம் நாள்,
2026, ஏப்ரல் 17 ம் நாள், வெள்ளிக்கிழமை
சூரிய உதயம்: காலை 06 மணி 03 நிமிடங்கள்
இன்றைய நட்சத்திரம்: பகல் 12:05 PM வரை ரேவதி பின்பு அஸ்வினி
சந்திராஷ்டமம்: உத்திரம் அஸ்தம்
சூலம்: மேற்கு
இன்று நல்ல நேரம்:
காலை: 09:30 முதல் 10:30 வரை
மாலை: 04:30 முதல் 05:30 வரை
இராகு காலம்: காலை 10.30 முதல் 12.00 வரை
எமகண்டம்: மதியம்: 03.00 முதல் 04.30 வரை
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். சமயத்திற்கு கேற்றார் போல வளைந்து கொடுத்து போகவும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
ரிஷப ராசி நேயர்களே, ஏற்றம் தரும் விதத்தில் பொருளாதாரம் உயரும். சுப காரிய முயற்சிகள் சிறப்பாக அமையும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மிதுன ராசி அன்பர்களே,மனதில் பக்தி எண்ணம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். பெற்றோர்கள் வழியில் நல்லது நடக்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்ம ராசி நேயர்களே,எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளவும். பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
கன்னி ராசி நேயர்களே, புது பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் நலம் பலம் பெரும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
துலாம் ராசி நேயர்களே, உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். பழகியவர்களால் நன்மை ஏற்படும். வரும் தடைகளை கூட தகர்த்தெறிய முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே,குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். பல நாட்களாக தடைப்பட்டு வந்த பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
தனுசு ராசி நேயர்களே, குடும்ப சிக்கலை பேசி சரி செய்துகொள்ள முடியும். குறுகிய மனப்பான்மை நீங்கும். தேவைற்ற செலவுகளை குறைக்க திட்டமிடவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
மகர ராசி நேயர்களே, உங்களை சுற்றி இருப்பவர்கள் சாதகமாக செயல்படுவர். நெருக்கமானவர்களின் சந்திப்பு நிகழும். வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
கும்ப ராசி நேயர்களே,பிரபலங்கள் அறிமுகமாவர். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மீன ராசி நேயர்களே, நின்று போன காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். புதியவர்களை அதிகம் நம்பாமல் இருப்பது நல்லது. எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
இன்றைய சிறப்பு:
அமாவாசை...
ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!