இன்றைய தினம்: 19-Apr-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

By News Dsk

பராபவ வருடம், சித்திரை மாதம் 06 ம் நாள்,

2026, ஏப்ரல் 19 ம் நாள், ஞாயிற்றுக்கிழமை


சூரிய உதயம்: காலை 06 மணி 02 நிமிடங்கள்


இன்றைய நட்சத்திரம்: காலை 09:26 AM வரை பரணி பின்பு கார்த்திகை

சந்திராஷ்டமம்: சித்திரை

சூலம்: மேற்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
07:30 - 08:30 வரை

மாலை:
03:30 - 04:30 வரை

இராகு காலம்:
மாலை 04.30 - 06.00 வரை

எமகண்டம்:
மதியம் 12.00 - 01.30 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,குடும்ப செல்வாக்கு வெகுவாக உயரும். புதிய முயற்சிகள் கைகொடுக்கும். தூர பயணங்களால் செலவினங்கள் கூடும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே,குடும்ப கௌரவத்தை உயர்த்த முடியும். நண்பர்கள் கேட்ட உதவியை செய்வர். திட்டமிட்ட காரியம் ஒன்று தாமதமாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே,வெளிவட்டாரத்தில் சாதகமான அனுபவங்கள் கிடைக்கும். புது நண்பர்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

கடக ராசி அன்பர்களே, தினமும் தியானம் செய்வது மன நிம்மதியை தரும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர்களுடன் நல்லுறவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

சிம்ம ராசி நேயர்களே,தெய்வ பிராத்தனைகள் நிறைவேறும். அனுபவ அறிவை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் அமையும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி ராசி நேயர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். புது வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் வரும். எதிரிகளின் பலம் குறையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

துலாம் ராசி நேயர்களே, குடும்ப பெரியவர்களால் ஆதாயம் உண்டு. கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உறவினர்கள் வழியில் சில சங்கடங்கள் வரும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

விருச்சிக ராசி நேயர்களே,குடும்பத்தில் ஆனந்தம் நிறைந்திருக்கும். நெருக்கமானவர்களின் சந்திப்பு நிகழும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

தனுசு ராசி நேயர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். முன்கோபத்தை குறைக்கவும். நண்பர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மகர ராசி நேயர்களே, எதையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் பிறக்கும். திட்டமிடாத செலவுகள் நிறையவே வரும். பல நல்ல மனிதர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கும்ப ராசி நேயர்களே,குடும்பத்துடன் பயணிக்க வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும். அண்டை, அயலாரிடம் கவனமுடன் இருப்பது நல்லது. திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மீன ராசி நேயர்களே, மனதில் இருந்த விரக்தியான எண்ணங்கள் அகலும். பிரியமானவர்கள் ஆதரவாக இருப்பர். பெற்றோர்களின் ஆலோசனை கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.


இன்றைய சிறப்பு:

கார்த்திகை விரதம்...

மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE